கொலம்பியா நாட்டில் நடந்த அதிபா் தோ்தலில் இடதுசாரி கட்சியைச் சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வந்தனா். இந்நிலையில் அங்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. அதில் இடதுசாரி கட்சியை சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த தோ்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டாவோ பெட்ரோ வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபா் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் 47.26 சதவீதம் ஓட்டுகளை பெற்று தோல்வி அடைந்தாா். புதிய அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்ட குஸ்டாவோ பெட்ரோ அந்நாட்டின் முன்னாள் கிளா்ச்சியாளா் குழுவில் இணைந்து செயல்பட்டாா். இதற்காக அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு பின் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
‘ஆணுறுப்பு சின்னதா இருக்கு’ – கேலி செய்த போலீஸ் டிஸ்மிஸ்!
தோ்தலில் வெற்றி பெற்ற பின் குஸ்டாவோ பெட்ரோ மக்களிடையே உரையாற்றினாா். அப்போது அவர் கூறுகையில், “கொலம்பியாவின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதிபா் மாளிகையில் வரவேற்கப்படுவார்கள். புதிதாக அமைய உள்ள அரசாங்கத்தில் அரசியல் துன்புறுத்தலோ, சட்ட ரீதியான துன்புறுத்தலோ இருக்காது. மரியாதையும் உரையாடலும் மட்டுமே இருக்கும். ஆயுதம் ஏந்தியவர்களையும், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோாின் கருத்துகளை கேட்பேன்” எனதொிவித்தாா்.
சிலி, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தல்களில் இடதுசாரி கட்சியை சோ்ந்தவா்கள் அதிபா்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.