இந்தியாவின் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, அதன் பங்குகளை வாங்க செபி ஒப்புதல் அளித்துள்ளதால் சமீபத்தில் செய்திகள் வெளியானது.
பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனம், நிதியினை திரட்ட பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
ஆனால் பெரிதாக இன்று வரையில் கைகொடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் கடனை அடைக்க முடியாமல் பெரும் பிரச்சனையில் சிக்கித் தத்தளித்து வருகின்றது.
கடன் டூ ஈக்விட்டி
குறிப்பாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை செலுத்த போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள போதிலும், நிறுவனம் அதனை செய்ய முடியாமல் தத்தளித்து வருகின்றது.
இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் மதிப்பினை ஈக்விட்டிகளாக மாற்றலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூலை 26 முதல் தொடங்கும் 5ஜி ஏலத்திற்கு முன்னதாக, அரசாங்கம் கடனை ஈக்விட்டிகளாக மாற்றலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிதி திரட்ட வழி வகுக்கும்
கடும் நிதி நெருக்கடியில் உள்ள தொலைத் தொடர்ந்து நிறுவனத்திற்கு மேற்கொண்டு, 25,000 கோடி ரூபாய் நிதி திரட்டும் இலக்கினை அடைய இந்த திட்டம் மிக உதவிகரமாக இருக்கும் என்றும் மூத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.
விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்
அரசின் இந்த திட்டத்தில் 16,133 கோடி ரூபாய் வட்டியை ஈக்விட்டியாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு நிறுவனத்திற்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நிறுவன வாரியம் இதை 2 – 3 வாரங்களில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வசம் எவ்வளவு?
இந்த பரிமாற்றத்திற்கு பிறகு அரசு, வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 32% பங்கினைக் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புரோமோட்டர்களின் பங்கு விகிதமானது 75%ல் இருந்து 50% ஆக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவன சட்டம்
நிறுவன சட்டத்தின் படி 62(4)ன் கீழ் கடனை ஈக்விட்டியாக மாற்றுவது செய்யப்படும். வோடபோனைடியா முதலீடு மற்றும் தீபம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வோடபோனின் பங்குகள் அரசுக்கு வழங்கப்படும்.
வளர்ச்சிக்கு உதவும்
இந்திய அரசு வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதால் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் எந்தவித கட்டுப்பாட்டையும் பெற முடியாது என்று செபி அதன் சமீபத்திய அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. எனினும் வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகளை இந்திய அரசு வாங்குவதால், அதன் நிதி நெருக்கடியும் சீராகும் என்பதால், நிறுவனம் மேற்கொண்டு வளர்ச்சியினை நோக்கில் நகரலாம்.
Govt may convert vodafone idea’s debt to equities before 5G auction
It has been reported that the amount of debt owed to the Government of India can be converted into equities.