பெங்களூரு,
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியானது பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, நான்காம் ஓவரில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால், போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு 50 சதவீத கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.
Related Tags :