விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் கே.ராஜன் அணி வெற்றி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் கே.ராஜன் தலைமையில் ஒரு அணியினரும் திருவேங்கடம் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். உடல்நலக்குறைவு காரணமாக தற்போதைய தலைவர் டி.ராஜேந்தர் போட்டியிடவில்லை.
இந்த தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றி பெற்றனர். தலைவராக கே.ராஜன் வெற்றி பெற்றார். செயலாளராக கே.காளையப்பன், துணை தலைவராக எஸ்.நந்தகோபால், பொருளாளராக பி.முரளி, இணை செயலாளராக சாய் என்கிற சாய்பாபா ஆகியோர் தேர்வு பெற்றார்கள். செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் 9 பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.