Jio Recharge: ஜியோவின் அதிரடி திட்டம்! வெறும் 75 ரூபாய்க்கு அத்தனைப் பயன்கள்!

Jio recharge plan offers: நாட்டின் பெரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமாக வளர்ந்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் வழங்கும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது.

பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் அதிகபட்ச சலுகைகளை வழங்குகின்றன.

நுகர்வோர் மலிவான திட்டங்களை விரும்பும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ ரூ.100-க்கும் குறைவான விலையில் சிறந்த திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த மலிவான திட்டத்தில் நிறுவனம் பல அருமையான நன்மைகளை வழங்குகிறது. ஜியோவின் திட்டம் ரூ.75 மட்டுமே.

Dangerous Apps: இந்த ஆப்கள் வேண்டாம்; மிகவும் ஆபத்தானது… உடனடியாக அழித்து விடுங்கள்!

இருப்பினும், இது ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. சாதாரண பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வேறு ரீசார்ஜ் திட்டங்களை அளிக்கிறது. ஜியோவின் இந்த திட்டத்தை குறித்து கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வோம்.

ஜியோவின் ரூ.75 சிறந்த திட்டம்

ஜியோபோன் பயனர்கள் ரூ.75 ரீசார்ஜ் செய்தால், டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டமானது 23 நாள்களுக்கு செல்லுபடியாவதாக உள்ளது.

இது 23 நாள்களுக்கு மொத்தம் 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது. இதில் ஜியோ சினிமா (Jio Cinema), JioSaavn போன்ற பயன்பாடுகளும் அடங்கும்.

Facebook Tips: உங்கள் பேஸ்புக் பக்கத்தை ரகசியமாக நோட்டமிடுபவர் யார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா?

கூடுதலாக, இந்த திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் மொத்தம் 50 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு வசதியையும் வழங்குகிறது.

பிற சலுகை திட்டங்கள்

இதேபோல ஜியோபோன் பயனர்களுக்கு வேறும் பல நல்ல திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களின் விலை ரூ.91, ரூ.125, ரூ.152, ரூ.186, ரூ.222 மற்றும் ரூ.899 ஆக இருக்கிறது.

இந்தத் திட்டங்களில் கூட டேட்டா, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் பயனர்களுக்கு கிடைக்கிறது. மேலும், OTT நன்மைகளுடன் வரும் திட்டங்களை நீங்கள் தேடுகிறீர்களானால், நிறுவனம் ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1499 ஆகிய விலையில் அருமையான போஸ்ட்பெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது.

Power Saving Tips: மின்கட்டண உயர்வால் பதற்றம் வேண்டாம் – இந்த வழியை பின்பற்றி பில் தொகையை பாதியாக்கலாம்!

இந்த திட்டங்கள் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றிற்கான அணுகல் இந்த திட்டங்களுடன் வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.