எருமப்பட்டி அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்தையா(53). இவர் சொந்த வேலை காரணமாக கஞ்சம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் முத்தையா மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று உள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முத்தையாவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்தையா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.