சென்னை: டெல்டாவில் புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள 8 மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா பகுதிகளில் புதிதாக 8 மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் “காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது திமுக அரசு.
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே இந்த நிலைமை. இப்படி இயற்கை வளங்களை சூறையாடுவது தான் நீங்கள் கொடுக்கும் பாதுகாப்பா? விவசாயிகளின் கோரிக்கைகளை திமுக அரசு ஏற்றுப் புதிதாக தொடங்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் எதிர்பார்ப்பு” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது @arivalayam அரசு.
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே இந்த நிலைமை. இப்படி இயற்கை வளங்களை சூறையாடுவது தான் நீங்கள் கொடுக்கும் பாதுகாப்பா?