மதுரா : உத்தர பிரதேசத்தில் சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’கில் நட்பு அழைப்பை ஏற்க மறுத்த, 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி படுகொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.
உ.பி., மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இங்குள்ள தொழிற்சாலையில் பாதுகாவலராக பணியாற்றுகிறார். இவரது மகளுக்கு 16 வயது. இந்த சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்ற இளைஞர் பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்தார். அந்த சிறுமி, அதை ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி, நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டுக்கு கத்தியுடன் வந்தார்; சிறுமியை சரமாரியாக குத்தினார்.
அதை தடுக்க வந்த சிறுமியின் தாயையும் குத்தினார். பின், தன்னைத் தானே குத்திக் கொண்டார். இந்த சம்பவத்தில், அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறுமியின் தாயும், ரவியும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவி மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளார்.
மதுரா : உத்தர பிரதேசத்தில் சமூக வலைதளமான, ‘பேஸ்புக்’கில் நட்பு அழைப்பை ஏற்க மறுத்த, 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி படுகொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர். உ.பி., மாநிலம் மதுரா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.