சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஜி.எம்., குழுமத்திற்கு தொடர்புடைய 40 இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த குழுமம், ஹோட்டல்கள், போக்குவரத்து, இறக்குமதி சரக்கு மற்றும் ஏற்றுமதி தொழில், ரியஸ் எஸ்டேட், பொழுதுபோக்கு பூங்கா சேவை, மதுபான தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரி அதிகாரிகள், கடந்த வாரம் முதல் சோதனை செய்தனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம், சாந்தோமில் உள்ள உரிமையாளர் எம்.ஜி.எம். முத்து வீடு, எக்ஸ்போர்ட்ஸ் அலுவலகம், ஹோட்டல்கள், விழுப்புரம் , தூத்துக்குடி என்று குழுமத்திற்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், எம்ஜிஎம் குழுமம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மூன்று கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கப்பணம் மற்றும் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.