சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும் இதன் காரணமாக ஃபிக்ஸட் டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
அந்த வகையில் இந்திய மக்களால் பெரிதும் கவரப்பட்ட திட்டங்களில் ஒன்றான செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கும் வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் பலர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் இந்த திட்டத்திற்கும் வட்டி விகிதத்தை உயர்த்தினால் இதில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு உள்ளது.
கூகுள், அமேசான், பேஸ்புக் ஆகியவை அச்சுறுத்தல் தரும் நிறுவனங்கள்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
செல்வமகள் சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பாதுகாப்பான முதலீடு மற்றும் சிறந்த சேமிப்பு திட்டம் என்பதாலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் ஆகிய முக்கிய செலவுக்காகவும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
பெண் குழந்தைகள்
மற்ற அரசின் நிதித்திட்டங்களை விட இந்த திட்டத்தில் அதிக வட்டி என்பதால் இந்த திட்டத்தில் ஏராளமான பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க முடிகிறது. மேலும் இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை அரசு மேற்கொண்டு வருகிறது என்பதும் தபால் நிலையங்கள் பொதுத்துறை வங்கிகள் மூலம் இந்தத் திட்டத்தில் சேமிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி
இந்த நிலையில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது. இதன் காரணமாக அனைத்து வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
உயரும் வட்டி விகிதம்
அந்த வகையில் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்பட ஒருசில அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 7.6% வட்டி செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு வழங்கப்படும் நிலையில் 8.00% அல்லது 8.10% என மாற்றம் வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
செல்வமகள் சேமிப்பு திட்டம் மட்டுமின்றி பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், என்எஸ்சி போன்ற திட்டங்களுக்கும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோரிக்கை
2022 – 23 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் மாற்றம் இல்லாத நிலையில் 2022 – 23 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்பட ஒரு சில திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Sukanya Samriddhi Yojana Interest Rate may be increased soon
Sukanya Samriddhi Yojana Interest Rate may be increased soon | செல்வமகள் சேமிப்பு திட்ட முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்: எப்படி தெரியுமா?