நைரோபி : எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. ஒரொமியா மாகாணத்தை எத்தியோப்பாவில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவிப்பதை அந்த அமைப்புகள் நோக்கமாக கொண்டுள்ளன.இந்த அமைப்புகள் அவ்வப்போது மக்கள், ராணுவம் மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஒரொமியா மாகாணம் கிம்பி நகரில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 230 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அம்ஹரா என்ற இனக்குழுவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
நைரோபி : எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்தனர்.கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.