பீஜிங், : சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த கோடை மழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாகின. தெருக்களில் ஆறு போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிறிய வீடுகள், கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.மழை வெள்ளத்தின் போது ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர். குவாங்ஜி மாகாணத்தில் வீடு இடிந்ததில் 5 பேர் பலியாகினர். அதே போல குவாங்டான் மாகாணத்தில் போஷான் நகரை கடும் சூறாவளி தாக்கியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்து பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. ஏராளனமான வாகனங்கள் சேதமடைந்தன. எனினும் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என அதிகாரிகள் கூறினர்.
பீஜிங், : சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த கோடை மழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாகின. தெருக்களில் ஆறு போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிறிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.