வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் – நிமல் பியதிஸ்ஸ எம்.பி யோசனை


வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை முன்பதிவு செய்வதன் மூலம் குறைந்தது முன்னூறு அல்லது நானூறு டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடு முழுவதும் பலரிடம் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு நாணயம் உள்ளது.

சுற்றுலாத் துறையில் ஒரு முன்னாள் வழிகாட்டியிடம் சிறிய அளவு வெளிநாட்டு நாணயம் இருக்க கூடும்.

இந்த மறைமுகமான வெளிநாட்டு நாணயத்தை வெளியே கொண்டு வரவே நான் இதனை முன்மொழிகிறேன்.

வெளிநாட்டு நாணயத்தில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் - நிமல் பியதிஸ்ஸ எம்.பி யோசனை

மறைந்திருக்கும் டொலர்களை வெளிக்கொணர முடியும்

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெட்ரோல் நிலையம் ஒதுக்கப்பட்டு வெளிநாட்டு பணத்தில் மட்டுமே எரிபொருளை வழங்க வேண்டும்.

அப்போது நாடு முழுவதும் குறைந்தது முந்நூறு அல்லது நானூறு டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் எண்ணிலடங்கா வெளிநாட்டு நாணயங்களை இழக்க முடியாது.

தான் கூறுவதை செயற்படுத்தினால் எரிபொருள் தேவையுடன் மறைந்திருக்கும் டொலர்களை வெளிக்கொணர முடியும்.

ஆகையினால் எனது பரிந்துரையைப் பற்றி சிந்தியுங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.