சென்னை : சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘யோகா செய்தால் அவர்களுக்கு சமுதாயத்தின் மீதான அக்கறை, மனிதநேயம் அதிகரிக்கும்.யோகா தமிழகத்தில் இருந்து பிறந்துள்ளது என்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்,’என்றார்.