ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியர் தண்டாயுதபாணி மகன் சந்தோஷ் கண்ணா (10). தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் இவர், தன் 7 வயதில் கார்களின் பெயர், தயாரிப்பு, இன்ஜின் வடிவமைப்பை கூறி அசத்தினார்.
கார்களின் செயல்பாடு மட்டுமின்றி, கந்த சஷ்டி கவசம் துவங்கி, அருணகிரிநாதர் பாடல்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள் செயல்பாடுகளை விளக்குதல் என, சிறுவன் அசத்தி வருகிறார்.
இவரை பாராட்டி, ‘எங்கஸ்ட் கார் என்சைக்ளோபீடியா இன் த வேர்ல்ட்’ என்ற டாக்டர் பட்டத்தை, ‘தி யுனிவர்சல் தமிழ் யுனிவர்சிட்டி’ வழங்கியுள்ளது. மேலும், ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ உட்பட 20க்கும் அதிகமான சாதனை பதிவு சான்றிதழ் பெற்றுள்ளார்.