சென்னை : அதிமுக பொதுக்குழுவை நடத்தியே தீர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். பொதுக்குழுவை தள்ளிவைக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என கடிதத்தில் பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.