உலக யோகா தினம்.. வணிகம் பற்றி சிரசாசனம் சொல்லும் 5 முக்கிய விஷயங்கள் என்ன?

இன்றைய காலத்தில் மக்கள் அனைவரும் பணம், புகழ் என மக்கள் அலை பாய்கின்றனர். மன நிம்மதி குறித்து யோசிப்பதே இல்லை.

ஆனால் அப்படியானவர்களுக்கு யோகாசனம் பெரும் பயனுள்ளதாக இருக்கும். யோகா+ஆசனம் மனதை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி ஆகும்.

அந்த வகையில் தொழில்முனைவோருக்கு பயனுள்ள ஒரு ஆசனத்தினை பற்றி இந்த உலக யோகா தினத்தில் பார்க்க இருக்கிறோம்.

உடல் ஆரோக்கியத்தை தாண்டி மிகப்பெரிய வர்த்தகமாக மாறிய யோகா..!

பயத்தை போக்கும்

பயத்தை போக்கும்

நாம் இன்று பார்க்கவிருப்பது சிரசாசனம் (headstand). புவியீர்ப்புக்கு எதிரான நிலையில் செய்யப்படும் சிரசாசனம், பல நன்மைகளை அளிக்க கூடியது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் 5 முக்கிய நன்மைகளை இங்கே உள்ளன.

ஒவ்வொரு தொழிலதிபரும் தங்கள் அச்சத்தினை போக்க வேண்டும், அதற்கு சிராசனம் செய்வது உங்கள் பயத்தினை போக்க வழிவகுக்கும்.

மன அழுத்தத்தினை குறைக்கும்

மன அழுத்தத்தினை குறைக்கும்

இந்த ஆசானம் உடல் முழுமைக்கும் ஆற்றலை அளிக்கிறது. கவனத்தினை அதிகரிக்கிறது. உங்களது சிந்தனையில் தெளிவை அதிகரிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மன அழுத்தத்தினை குறைக்கிறது.

எல்லாவற்றையும் செய்யுங்கள்
 

எல்லாவற்றையும் செய்யுங்கள்

சிரசாசனாவில் உங்களது தலை, தோள்பட்டை, முதுகெலும்பின் மேல் பகுதியும் முழு எடையையும் தாங்குகிறது. இதோபோல் ஒவ்வொரு தொழில் முனைவோரும் வளர்ச்சியினை அடைவதற்கு , அவரது குழுவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதுவே உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

விடாமுயற்சி

விடாமுயற்சி

சிரசாசனம் என்பது ஒரு நிலையான பயிற்சி. இது விடாமுயற்சியினை சுட்டிக் காட்டுகின்றது. இது ஒரு வணிகத்தினை உருவாக்குவது போன்றது. நீங்கள் ஒவ்வொரு நாளும் அதனை செய்ய வேண்டும். சரியாக செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் இலக்கினை அடைய முடியும்.

சம நிலையாக இருக்க வேண்டும்

சம நிலையாக இருக்க வேண்டும்

வணிகம் என்பது செல்வத்தினை ஈட்டும் ஒரு செயல்முறை. இது தொழில் முனைவோருக்கு மட்டு அல்ல, இது அவர்களை சார்ந்த குழுமம், சமுதாயம், நாட்டுக்கும் பயனளிக்கும், எனவே பயணத்தில் மூன்றும் சமநிலையாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பது மிகவும் முக்கியம். அதேபோல் தான் சிரசாசனம் ஒரு நன்மையை மட்டும் கொண்டிருக்கவில்லை. பல நன்மைகளை கொண்டுள்ளது. இது ஹார்மோன்களின் இயக்கத்தினையும் மேம்படுத்துகின்றது.

வெற்றிக்கு வழிவகுக்கும்

வெற்றிக்கு வழிவகுக்கும்

சிரசாசனத்தில் கை, கால் மற்றும் மைய வலிமை உருவாக்குவது உட்பட பல உடல் நலன்கள் உள்ளன. ஆனால் கழுத்து மற்றும் தலை பகுதியில் எடை அழுத்தத்தினை தவிர்க்க வேண்டும், அதற்கு பதிலாக உங்கள் கைகள் மற்றும் தோல்கள் உங்களை உயர்த்த அனுமதிக்க வேண்டும். இதேபோல வணிகத்திலும் சில பலவீனமான இணைப்புகளை ஆதரிக்க, வலுவான செயல்பாடுகள் வேண்டும். இதனை சரியாக செய்தாலே நீண்டகாலத்திற்கு வெற்றியினை பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

international yoga day: what sirsasana teaches about business?

Headstand. Yogasana is an object performed in the opposite position to gravity. What are the benefits of this?

Story first published: Tuesday, June 21, 2022, 14:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.