திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட போதும் கவச உடை அணிந்து தனது வாக்கை, சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து செலுத்யியிருந்தார். தொடர்ந்து சுற்றுப்பயணம், நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வந்த கனிமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை சிஐடி காலனி இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அடுத்த சில நாட்கள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.