கடலில் மூழ்கிய ஜம்போ கப்பல் உணவகம்!

ஹாங்காங்கில் அடையாளங்களின் ஒன்றாக திகழ்ந்தது ஜம்போ கப்பல் உணவகம். 1976ஆம் ஆண்டில் சேவையை தொடங்கிய இந்த கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை போன்ற தோற்றம் கொண்டது. இங்கிலாந்து ராணி எலிசபத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

நகரின் அடையாளமாக இருந்த இந்த கப்பல் உணவகம் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்த்து வந்தது. மேலும், ஏராளமான திரைப்படங்களும் இந்த கப்பலில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கப்பல் உணவகத்தின் சேவை நிறுத்தப்பட்டது. ஏராளமான ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகும், இந்த கப்பல் உணவகத்தை பராமரிக்க அதிக நிதி செலவழிக்க இயலாததால் சேவையை முழுவதுமாக நிறுத்தி விட உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

கொலம்பியா அதிபராக குஸ்டாவோ பெட்ரோ தேர்வு – முதன்முறையாக இடதுசாரி ஆட்சி!

இந்த நிலையில், ஹாங்காங்கை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஜம்போ கப்பல் உணவகம் கடலில் மூழ்கியது. இந்த தகவலை அதன் முதன்மை நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பல் மூழ்க தொடங்கியவுடன் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், கப்பலின் உள்ளே தண்ணீர் நுழைய தொடங்கியவுடன் கப்பலை மீட்க முயற்சித்தும் மீட்க முடியவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.