’கையை பிடிச்சு இழுத்தியா?’ – முன்னாள் காதலியை இழுத்த மும்பை நபருக்கு நேர்ந்த கதி!

பெண்ணின் கையை பிடித்து இழுத்ததற்காக ஒருவருக்கு ஓராண்டு காலம் சிறைத்தண்டனை அளித்துள்ளது மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம்.
பொதுவெளியில் காதலியாகவே இருந்தாலும் பெண்ணின் கையை பிடித்து இழுப்பது அவரது கண்ணியத்தையும், அடக்கத்தையும் சீர்க்குலைப்பதற்கு சமம் எனக் குறிப்பிட்டு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டு காதலியை தாக்கியதாகவும், அவரது கண்ணியத்தை சீர்குலைத்ததாகவும் எழுந்த புகாரில் அந்த நபருக்குதான் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி, முந்தைய காதல் விவகாரமாகவே இருந்தாலும் அந்த நபர் அவ்வாறு நடந்துக்கொள்வதற்கு உரிமையில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 
20 பூனைகளால் கடித்து குதறப்பட்ட உரிமையாளர்.. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்!
ஆனால், குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர், தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு வயது குழந்தையோடு வாழ்ந்து வருவதை காரணமாக காட்டி மன்னிப்பு கோரினார். 
இதுபோக, குற்றச்சாட்டுக்கு ஆளானவர் தரப்பிலிருந்து, பெரிய தவறை செய்ததாக நீதிமன்றம் கூறியிருந்தாலும், சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் (2014) ஆன நிலையில், அதன் கால அவகாசத்தை கருத்தில்கொண்டு கடுமையான தண்டனை வழங்குவது நியாயமில்லை என்றும் வாதிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் ஓராண்டு சிறையும் வழங்கப்பட்டு, 5,000 ரூபாய் அபராதமும் அந்த நபருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
ALSO READ: 
ரிவர்ஸ் மோடில் இயங்கும் கடிகாரம்.. அதுவும் இந்தியாவில்.. எங்கு? ஏன் தெரியுமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.