இப்படி விலை ஏறினால் எதை சாப்பிடுவது.. கடுகடுக்கும் மக்கள்..!

ரஷ்யா – உக்ரைன் போர் வாயிலாக உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை குறையலாம்.. 3 நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு.. ஏன்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு?

இதில் முதலில் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமை மொத்தமாகத் தடை பெற்ற நிலையில் ஆசியச் சந்தையில் பெரும் தட்டுப்பாடு நிலவிய காரணத்தால் உலக நாடுகள் இந்தியாவைச் சார்ந்து இருந்தது.

கோதுமை

கோதுமை

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை வெளிநாட்டுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு சந்தையிலும் கோதுமை தட்டுப்பாடு அதிகரித்து விலை அதிகரித்தது.

விலை உயர்வு

விலை உயர்வு

இந்த விலை உயர்வைச் சமாளிக்க மக்கள் கோதுமை மாவுக்குப் பதிலாக அரிசியை அதிகளவில் பயன்படுத்தத் துவங்குவார்கள். அதனால் தற்போது அரிசி விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் சாமானிய மக்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

தினசரி உணவு
 

தினசரி உணவு

கோதுமை இந்திய மக்களின் மிக முக்கியமான மற்றும் தினசரி சாப்பிடும் உணவு பொருட்களாக இருக்கும் வேளையில் இதன் விலை உயர்வு நாட்டின் பெரும் பகுதி மக்களைக் கடுமையாகப் பாதித்தது. இந்த விலை உயர்வை சமாளிக்க மலிவு விலை உணவுக்கு மக்கள் ஒட்டுமொத்தமாக மாற உள்ளனர்.

டிமாண்ட் மற்றும் சப்ளை பிரச்சனை

டிமாண்ட் மற்றும் சப்ளை பிரச்சனை

கோதுமை விலையை ஒப்பிடுகையில் அரிசி விலை குறைவாக இருக்கும் வேளையில் பெரும் பகுதி மக்கள் அரிசிக்கு மாறுவார்கள், இதனால் டிமாண்ட் மற்றும் சப்ளை பிரச்சனை உருவாகி விலை உயர உள்ளது. ஆனால் இப்போது வரையில் அரிசி விலையில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றும் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 விலை உயர்வு

விலை உயர்வு

ஆனால் இந்த மாற்றம் உருவாகும் போது கட்டாயம் விலை உயரும் என்பதை உறுதியாகப் பல சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆசியாவில் 90 சதவீத மக்களின் அடிப்படை உணவு அரிசியாக இருக்கும் போது இந்த விலை உயர்வு கட்டாயம் உருவாகும் என்பது தான் தற்போதைய பிரச்சனை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rice price may surge soon just like Wheat; Big Problem on food inflation

Rice price may surge soon just like Wheat; Big Problem on food inflation இப்படி விலை ஏறினால் எதைச் சாப்பிடுவது.. கடுகடுக்கும் மக்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.