'உங்க குடும்பத்த பாருங்க! – நாக சைதன்யா ரசிகருக்கு சமந்தாவின் அதிரடி பதில்

தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை பற்றி வந்ததி பரப்பியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு நடிகை சமந்தா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் மனக்கசப்பு காரணத்தால் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு சமந்தா தனது திரைப்படங்களில் மிகவும் பிஸியாகிவிட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த திங்கட்கிழமை நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக வதந்திகள் பரவியது. அதுவும் சமந்தாவின் PR குழுதான் நாக சைதன்யாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க இந்த வதந்திகளை பரப்புவதாகவும் தகவல்கள் வெளியானது.

image

இதனையடுத்து இதுகுறித்து நாக சைதன்யா ரசிகர்கள் சமந்தாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில்,

’’பெண்ணை குறித்த வதந்தி – கண்டிப்பாக உண்மை!
ஆணை குறித்த வதந்தி – பெண்ணால் விதைக்கப்பட்டது!

வளருங்கள் தோழர்களே. சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக நகர்ந்துவிட்டனர்…
நீங்களும் தாண்டிசெல்லவேண்டும். உங்கள் வேலையில்…

உங்கள் குடும்பங்களில் கவனம் செலுத்துங்கள்…
நகர்ந்து செல்லுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.