டெல்லி: ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 6ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும்; அதற்கு மேல் ஒத்திவைக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.