திருவண்ணாமலையில் லாரி டயரில் சிக்கி வாலிபர் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் சக்திவேல்(21).
இவர் நேற்று காலை அவரது நண்பரான நெல்லிமரத்துரை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அத்திப்பட்டு கிராமத்திலிருந்து ஜமுனாமரத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது முன்பாக சென்று கொண்டிருந்த லாரியை அவர்கள் முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்க டயரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சக்திவேல் லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.