திருச்சியில்,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், மகள் இறந்த துக்கம் தாளாமல் தாயும் தற்கொலைக்கு முயன்றார்.
கலிங்க முடையான்பட்டியைச் சேர்ந்த மூக்கன் – அனுராதா தம்பதியின் மகள் அனுசுயா, பொதுத்தேர்வில் 600க்கு 383 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கூறி தாய் அனுராதா, அனுசியாவை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்றிரவு அனைவரும் உறங்கிய நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் இறந்த துக்கம் தாளாமல் தாய் அனுராதாவும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.