ஸ்டைலான கெட்டப்பில் விஜய்.. ‘தளபதி 66’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய் நடித்துவரும் ‘தளபதி 66’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கும் புதியப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சிறப்புத் தோற்றத்தில் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப்படம் நடிகர் விஜயின் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று குடும்ப பின்னணிப் படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்தப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘தளபதி 66’ படத்திற்கு தெலுங்கில் ‘வரசுடு’ (‘Varasudu’) என்றும், தமிழில் ‘வாரிசு’ என்றும் தலைப்பு வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

image

இந்நிலையில், ‘தளபதி 66’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களின்படி படத்திற்கு வாரிசு என்றே பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் கோட் சூட்டுடன் ஸ்டைலான கெட்டப்பில் இருக்கிறார். பாஸ் திரும்பிவிட்டார் என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள். நாளை விஜய் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் வகையில் வாரிசு பட தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.