நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் வரிசை என்பன மக்களை உச்சக்கட்ட அதிருப்தி நிலைக்குக் கொண்டுச் சென்றுள்ளது.
எரிபொருள் வரிசையில் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்குதல், பானம் வழங்குதல் என பல மனிதாபிமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே, தன்னுடைய பிறந்தநாளை யுவதியொருவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெலிகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதியின் பிறந்தநாளான ஜூன் 19ஆம் திகதியன்று, ஸ்கூட்டரின் மேல் கேக் வைத்து வெட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரிசையில் நின்றிருந்த ஏனையோரும், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை அலங்கரித்து, கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இன்றும் பிறந்தநாள்
அதேபோல, எரிபொருளைப் பெறுவதற்காக இரண்டு நாட்கள் வரிசையில் நிற்கும் இளைஞன் ஒருவருக்கு இன்று பிறந்தநாள். இதை அறிந்த வரிசையிலிருந்த ஏனையவர்வள் ஒன்றுதிரண்டு, வரிசையிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
பேராதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (21)இந்த சம்பவம் நடந்ததுள்ளதாக தெரியவருகின்றது. பேராதனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்த இளைஞர் ஒருவருக்கு இன்று பிறந்தநாள் என தெரிவிக்கப்பட்டதையடுத்து வரிசையில் நின்ற இளைஞர்கள் அருகில் உள்ள கடையில் இருந்து கேக்கை எடுத்து வந்து பிறந்தநாள் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் கொண்டாடும் இளைஞன் இன்றும் வீடு செல்லாமல் வரிசையில் காத்திருப்பதுதான் சோகம்.