international yoga day:யோகாசனம் செய்து அசத்திய முதல்வர்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி டெல்லி அரசு சார்பில் இன்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தியாராஜ் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பொது மக்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது:

யோகா பயிற்சி செய்யும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தினால், அதனை அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப்பார்கள். குழந்தைக்கு யோகா கற்பிப்பது குறித்தும், பள்ளிகளில் அதை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.

டெல்லி அரசு சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது என்றாலும், யோகா செய்வதை பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கருதி அதனை மேற்கொண்டால், அவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

ம். நான் 8-ம் வகுப்பில் யோகாவை இலவசமாகக் கற்றுக்கொண்டேன். டெல்லி யோகா பள்ளியின்கீழ், நடத்தப்படும் இலவச வகுப்புகளின் ஒரு பகுதியாக ஆண்கள், பெண்கள், பணக்காரர்கள், ஏழைகள் என 17,000க்கும் மேற்பட்ட டெல்லிவாசிகள் தினமும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் யோகா பயற்சி பெற்று வருகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலையின்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட இலவச ஆன்லைன் யோகா வகுப்புகள் மூலம் 4700 பேர் பயனடைந்தனர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.