மத்திய அரசு அதன் தேவையற்ற செலவுகளை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதால், அரசு ஊழியர்கள் அவர்கள் உரிமையுள்ள பயண வகுப்பில் கிடைக்கும் மலிவான கட்டணத்தில் விமானங்களை தேர்வு செய்ய வேண்டும் என நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்ந்து எரிபொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து செலவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நிதியமைச்சகம் இப்படி ஒரு உத்தவிரனை பிறப்பித்துள்ளது.
பால்மர் லாரி அண்ட் கம்பெனி லிமிடெட், அசோக் டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ், இந்தயன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசன் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட 3 பேரிடம் மட்டுமே விமான டிக்கெட்டுகளை வாங்க அரசு ஊழியர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
ஒரே நாளில் ரூ.19,757.13 உயர்வு: விமான பயணிகள் அதிர்ச்சி
இது தான் கண்டிஷன்
அனைத்து ஊழியர்களும் ஒரே சுற்றுபயணத்திற்கான டிக்கெட்டுகளை தேர்தெடுக்கப்பட்ட ஒரு டிராவல் ஏஜென்சி மூலம் மட்டுமே செய்ய வேண்டும் என செலவினத் துறை ஜூன் 16 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
எப்போது புக் செய்யணும்?
அதோடு விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போது 21 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே பயண சலுகை பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
இது அரசின் சுமையை குறைக்க பயன்படும் என்றும், சுற்று பயண திட்டத்தின் ஒப்புதல் இன்னும் செயல்பாட்டில் இருந்தாலும் கூட, முன்பதிவுகள் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
ரத்து செய்யாதீர்கள்?
72 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டுகளை பதிவு செய்யும் ஊழியர்கள், அது குறித்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும். அதேபோல ஊழியர்கள் தேவையற்ற டிக்கெட் ரத்துகளையும் தவிர்க்க வேண்டும். பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் அதற்கும் ஊழியர்கள் அதற்கான சரியான காரணத்தினை சமர்பிக்க வேண்டும்.
டிஜிட்டல் மூலம் புக் செய்யுங்க
ஊழியர்கள் டிக்கெட்களை பதிவு செய்யும்போது டிஜிட்டல் மூலமாக பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் அங்கீகரிக்கப்படாத டிராவல் ஏஜென்ட் அல்லது இணையதளத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதில் சிலருக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
நிலுவை எப்போது கிடைக்கும்?
விமான பயணத்திற்கான அனைத்து நிலுவைத் தொகையும் பயணம் முடிந்த 30 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் நிதியமைச்சகம் மற்ற துறைகளுக்கு தெரிவித்துள்ளது. அனைத்து துறைகளும் முந்தைய நிலுவைத் தொகையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செலுத்துமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பணவீக்கம்
இது தொடர்ந்து அதிகரித்து வரும் செலவினங்களுக்கு மத்தியில் நிதியமைச்சகம் இத்தகைய அறிவிப்பினை கொடுத்துள்ளது. கடந்த மே மாதத்தில் மொத்த பணவீக்கம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 15.88% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே மொத்த விலை பணவீக்கம் இரு இலக்கில் இருந்து வருகின்றது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 13.11% ஆக இருந்தது.
centre asks employees to buy cheap tickets, book them 21 days before travel
government aims to reduce unnecessary costs, the Ministry of Finance has issued an order requiring government employees to choose flights at the cheapest fares available in the travel class they are entitled to.