ஒரு புகை வண்டியின் கதை | My Vikatan

ஒரு நாள், அந்தி நேரம். மேகங்கள் கருகுமென்று சூழ, ஜில்லென்று காற்று, மரங்கள் அருகில் இல்லையென்றாலும், காற்று நாலா பக்கமும் அடிக்க, கோயிலுக்கு செல்ல செல்லம்மா, வேகமாக கிளம்பி கொண்டிருந்தார், காத்துக்கு ஜன்னல் படார் படார் என்று சத்தம் வர..

உடனே செல்லம்மா, பாரதியிடம்

“ஏங்க, அந்த ஜன்னல் தான் அடிக்குதுல, போய் சாத்துங்க.’’ என்றார்..

அதற்கு பாரதி,

“இங்க கண்ணம்மா டிரஸ் போடாம அழுகுறா நான் அதை பாக்கவா இல்ல, அங்க வந்து ஜன்னல் சாத்தவா.’’

“ஹ்ம்ம்ம், நானே பண்றேன்.. இது என்ன புதுசா’’ என்று புலம்பியபடி ஜன்னல் சாத்தினாள்.

“கொஞ்சம், சீக்கிரமா கிளம்புங்க, மழை வர மாதிரி இருக்கு..’’

“செல்லம்மா, இங்க நானும் கண்ணம்மாவும் ரெடி, நீ வந்தாச்சுன்னா, உடனே கிளம்பிளராம்…’’

“வாங்க வாங்க, நானும் ரெடி..’’

“அட, இன்னும் செப்பல் கூட போடலையா கண்ணம்மாவுக்கு,’’

“சாரி சாரி இப்போ போடறேன்’’ என்று சொல்லிக்கொண்டே பாரதி செப்பலை தேட,

“நீங்க எதுவும் பண்ண வேண்டாம், நானே பாத்துக்கிறேன்..’’

“நீங்க போய் பைக் எடுங்க, நானே செப்பல் போட்டுக்கிட்டு, வீட்டை பூட்டிட்டு வரேன்..’’

உடனே, பாரதி கையில் ஹெல்மெட் எடுத்து கொண்டு, வெளியே சென்றதும்.

செல்லம்மா, கண்ணம்மாவிடம்,

“கண்ணம்மா! அம்மா உள்ள போய்ட்டு, கதவை எல்லாம் சாத்திட்டு வரேன்,’’ பாஷை எதுவும் புரியாமல் கண்ணம்மா அமைதியாய் பார்த்து கொண்டே இருந்தால் அம்மாவை..

செல்லம்மா மெதுவாக,

இருப்பதென்னமோ ஒரு அறை, ஒரு கிச்சன் இருந்தாலும் கூடுதல் பொறுப்பு..சமையல் ரூம் ஜன்னல் சாத்தியாச்சு, gas ஆப் பண்ணியாச்சு, ரூம் ஜன்னல் சாத்தியாச்சு என்று பேசி கொண்டே வர..

கண்ணம்மா போலாமா என்று செல்லம்மா கேட்க..

“போலாமா” என்று மழலையில் சொல்ல..

ஒரு முத்தம் தழுவி கொண்டே, செல்லம்மா வீட்டை பூட்டி கொண்டு வெளியில் வந்தாள்.

பாரதி ஹெல்மெட் போட்டு கொண்டு,

`சீக்கிரமா வாங்க, பெட்ரோல் வேற இல்ல, சீக்கிரமா வா..மழை வர மாதிரியே இருக்கு, சீக்கிரமா கோயிலுக்கு போய்ட்டு வரலாம்’’ என்றார்.

“வரேன், வரேன், கத்தாதீங்க”.. என்றபடி கண்ணம்மாவுடன் வேகமாக வண்டியில் ஏறினாள் செல்லம்மா. அவளின் கையில் ஒரு பை, குடை , மேலும் கண்ணமாவிற்கென்று ஒரு தனி பை, அதில், diaper , தண்ணி பாட்டில், இரண்டு வாழை பழம் என அனைத்தையும் கச்சிதமாக பேக் செய்து வைத்திருந்தாள்.

வண்டியில் ஏறிய உடன் கண்ணம்மா, பாரதியிடம்

“நீங்க என்னிக்கு தான் பெட்ரோல் வெச்சுயிருக்கீங்க, எப்போ வெளிய போலாம் சொன்னாலும், பெட்ரோல் போடணும், பெட்ரோல் போடணும்னு புலம்புவீங்க’’ என்றால் கிண்டலாக.

Representational Image

வண்டியின், முன்னால் கண்ணம்மா, பின்னாடி செல்லம்மா உட்கார்ந்தவுடன்,

“போலாமா கண்ணம்மா” என்று பாரதி சொல்ல,

தன் மழலையில் போலாம் என்று சொன்னதும், பாரதி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

இரண்டு அடி நகரவில்லை, வண்டி ஆப் ஆகிவிட்டது.. உடனே, choke மாறி மாறி போட்டு கொண்டே, பத்து முறைக்குமேல், கிக்கரை மிதி மிதி என்று மிதித்ததும், வண்டி நகர்ந்தது..

உடனே, செல்லம்மா,

“எப்படியாச்சு பெட்ரோல் ப*ங்க் வர போங்க, நூறு ரூபாய்க்கு போட்டுக்கலாம்.. கால் எதுனா வலிச்சா சொல்லுங்க, நைட் மருந்து தடவி விடறேன்.. டென்ஷன் ஆகாம பொறுமையா போங்க”.. என்றாள்.

காதல் கலந்த புன்னகையுடன் வண்டி நகர, பாரதியின் தோள் மீது கைவைத்து கொண்டே, வண்டியின் கண்ணாடியில் கண்ணம்மாவை பார்த்து கொண்டே வந்தாள் செல்லம்மா..

பாரதியோ, ஒரு கண்ணாடியில் கண்ணம்மாவையும், மறு கண்ணாடியில் செல்லம்மாவையும் அடிக்கடி அவர்களையும் பார்த்து, வண்டியையும் ஒட்டி கொண்டே வர..

திடீரென்று, பாம் பாம், பாம் பாம் என்று காரின் ஹார்ன் சத்தம்,

சட்டென்று கோபமான பாரதி, செல்லம்மாவிடம், “எனக்கு ஒரு டவுட்.. இந்த கார் வெச்சுருக்க பாதி பேர், ஓரமாவே போக மாட்டாங்களா, பைக் போறவங்களா பார்த்து ஹார்ன் அடிச்சு கிட்டே வருவானுங்க…வாயில வருது, கண்ணம்மா இருக்கான்னு பாக்கறேன்.. “

அதற்கு. செல்லம்மா, எந்த பதட்டமும் இல்லாமல்,

மெதுவாக பாரதியிடம்,

“இதுக்கு தான் உங்க கிட்ட சொல்றது டிரைவருக்கு லீவு தராதீங்க, அவசரத்துக்கு வெளில போக எவ்ளோ கஷ்டம். “

“கொஞ்சமும், யோசிக்காத பாரதி, நீ எந்த கார் டிரைவர் சொல்ற, BMW இல்லனா, BENZ இல்ல AUDI , தெளிவா சொல்லுடா.. “

“நீங்க, ஒரே நாளல்ல, மூணு பேருக்கும் லீவு கொடுத்திருக்கீங்க,’’

“அய்யயோ, எதுக்கு செல்லம்மா..’’

“எதுக்கா ? சரியா போச்சு போங்க.. கண்ணம்மா போர் அடிக்குது, வெளில போலாம் சொன்னா எதுல கூட்டிகிட்டு போவீங்க,’’

அது “Rolls Royce…’’

“கரெக்ட், அந்த கார் டிரைவர் பொண்ணு கல்யாணத்துக்கு தான் போயிருக்காங்க..’’

“செல்லம்மா, அப்போ நம்ப போக வேண்டாமா கல்யாணத்துக்கு..’’

“வேண்டாம், முதல கோயிலுக்கு போலாம், அங்கே இருந்து யோசிப்போம்…’’

என்று இருவரும் சிரித்து கொண்டே, வண்டியில் இருந்து இறங்கினர்.

கண்ணம்மாவும், அப்பா, அம்மா சிரிப்பதை கண்டு தானும் சிரித்துக்கொண்டாள்..

ஒரு வழியாக கோயில் வந்து சேர்ந்தார்கள்…

கோயில் உள்ளே பெரிதாக கூட்டம் இல்லை, அனைத்து இடங்களிலும் வேகமாக சுற்றிவிட்டு, ஆண்டவா நீதான் காப்பாத்தணும் என்று சொல்லிக்கொண்டே பாரதி, கண்ணம்மாவிற்கு ஒவ்வொரு தெய்வத்தின் பெயரும் சொல்லி கொண்டே வந்தார்.

உடனே செல்லம்மா, பாரதியிடம்

“என்ன ரொம்ப சீரியஸா ஏதோ வேண்டிகிட்டிக்கீங்க.’’

அதற்கு பாரதி, “ஹஹஹஹ் அது ஒண்ணுமில்லடா. free யாவிடு..’’

“பரவலா சொல்லுங்க’’ என்று செல்லம்மா கேட்க,

பாரதி மெதுவாக,

“நம்ப பெட்ரோல் போடாமலே, பேசிக்கிட்டே இவ்ளோ தூரம் வந்துட்டோம்… எப்படியாவது, பத்திரமா வீட்டுக்கு போய் விற்றுடா என் தெய்வமே..அப்படின்னு வேண்டிகிட்டேன்..’’

செல்லம்மா, மெதுவாக சிரித்துக் கொண்டே..

“முதல அந்த பக்கம் பாருங்க’’ என்று சொல்ல, அங்கே புளி சாதம் பிரசாதம் தொன்னையில் வழங்கி கொண்டிருந்தனர். இருவருக்கும் ஏக குஷி..

“பாரதி, உங்க favorite ..’’

பெட்ரோல் டென்ஷன் மறந்து, இருவரும் ஆளுக்கு ஒன்று கையில் வாங்கி கொண்டு, நகர காத்து பலமாக அடித்தது..

பாரதி, செல்லம்மாவிடம்

“சீக்கிரமா வா வீட்டுக்கு போய்டலாம்’’ என்றான்.

மூவரும் கிளம்பி வெளியே வந்தனர். வெளியில் வந்த போது, அங்கே ஒரு வயதானவர், “அய்யா, கண்ணு தெரியாது எதுனா தாங்க’’ என்று கேட்க, சற்றும் யோசிக்காமல் செல்லம்மா பாரதியிடம்,

“அப்பா! அங்கிள் பசிக்குதா’’ என்று மழலையில் சொல்ல,

தனது பர்ஸை இரு வினாடிகள் தேடி, கடைசியாக பத்து ரூபாய் சில்லறையாக எடுத்து செல்லம்மா அவரிடம் கொடுத்தார்,

“நீங்க நல்லாயிருக்கணும்’’ என்று வாழ்த்தினார் அந்த யாசகர்..

பின்னர் பாரதி வேகமாக வண்டியை எடுக்க, மறுபடியும் அதே பிரச்சனை… தூறல் மெதுவாக ஆரம்பித்தது, வண்டியும் ஸ்டார்ட்டானது..

கண்ணம்மா போலாமா, என்று கேட்க,

போலாம் என்று மழலையில் சொல்ல,

வண்டி பல வித இசையோடு நகர்ந்தது.

Representational Image

கோயிலில் இருந்து, இரண்டு சந்து திரும்பியதும், மழையின் வேகம் கூடியது. அங்கே நிற்கவும் இடமில்லை, டக்கென்று, குடையை செல்லம்மா விரித்தும் பயனில்லை, மழை துளிகளால் வண்டி ஓட்ட முடியாமல், அங்கே தெருவோரம் ஒரு பிள்ளையார் சிலை, அதன் மேல் சிறு தகர ஓடுகள், அங்கே, ஏற்கனவே ஐந்து பேர்க்கு மேல் நிற்க, இதற்கு மேல் இடமும் இல்லை, இதைவிட்டால் வேறு இடமும் இல்லை. வேறு வழியில்லாமல், பாரதி பைக்கை ஓரமாக நிறுத்தினார். செல்லம்மா, கண்ணம்மா உடன் அந்த இடத்துக்கு குடையுடன் போனாள்,

பாரதி பின்னாடி வர.. அங்கே நெரிசல்..

இருக்கும் சிறுகூட்டத்தில், அரசியல் விமர்சனம், சினிமா அலசல், வானிலை அறிக்கை, பக்கத்துக்கு வீடு பிரச்சனை, வீட்டில் இருக்கும் பிரச்சனை, கவலை, சந்தோசம், பண பிரச்சனைகள், எதற்கும் பஞ்சமில்லை.. இருப்பது என்னமோ, ஐந்து பேர், ஆனால் பாரதியும், செல்லம்மாவும் தெரிந்து கொண்டது டிவி யில் வரும் அண்மை செய்திகள்..அவ்ளோ அலசல் அங்கே.. அவ்வப்போது, விவாத மேடையும்.. ஒரு புறம் இது போய்க்கொண்டே இருக்க, இடியும், மழையும் நிற்பது போல் இல்லை, நேரம் ஆகஆக வேகம் எடுத்து கொண்டே போனது.. அந்த சத்தம் ஏனோ கண்ணம்மாவிற்கு, இசை போல் இருந்தது, சிரித்து கொண்டே மழையின் இசையில் மயங்கி, பாரதி தோள் மீது தூங்கி போனால்.

ஸ்ட்ரீட் லைட் எரியவில்லை, மின்னல் வெளிச்சம் மட்டுமே அங்கே இருந்தது.. சட்டென்று, பாரதி காலில் ஏதோ ஊற, பயத்தில் கால்களை உதற அங்கே மழையின் குளிர்ச்சிக்கு புழுக்கள், தரையில் இருந்து வெளியேவந்து கொண்டிருந்தது.

அங்கே இருந்தவர்கள்,

சார், அப்போ அப்போ, கால அசைங்க, மழைக்கு நிறையா கிளம்பும்..

என்று சொல்ல சொல்ல, தகரத்தில் இருந்து ஒரு கரைப்பாண்பூச்சி பாரதி தலை மேல் விழ, அதை சட்டென்று பார்த்த செல்லம்மா பதறி கொண்டு தட்டியதும் கீழே ஓடியது..அருகில் சாக்கடை வேறு…

அங்கே இருந்தவர்கள்,

சார் பூச்சிக்கு உங்கள தான் பிடிக்கது போல, என்று சொல்லி சிரிக்க,

பாரதிக்கும், செல்லமாக்கும் எரிச்சல்..ஆனால் காண்பிக்கவில்லை. நேரம் ஆகஆக, ஏக பட்ட பூச்சிகள், கையில் கண்ணம்மா வேறு, நிற்க இடமும் இல்லை… கையில் இருந்த பையில், ஏற்கனவே, செல்லம்மா புளி சாதம் வைத்திருக்க, அதுவும் மழையில் கரைந்து, பூச்சிகளுக்கு உணவாகி போனது.. அதன் ஏக்கம் ஒரு புறம்.. இடம் இல்லாததால், உள்ளே, பாரதி, கண்ணம்மாவை தூக்கிக்கொண்டு நிற்க, அருகில் செல்லம்மா குடையுடன் மழையில், பாதியும், உள்ளே பாதி காலும் வைத்து அட்ஜஸ்ட் பண்ணி நின்னு கொண்டே இருந்தாள்..

சட்டென்று ஒரு கை, பாரதியின் தோளை தட்டியது,

திரும்பி பார்க்க அங்கே ஒரு வயதான பாட்டி..

தம்பி அங்க பாருங்க அது ஒரு விஷ பூச்சி, நான் மட்டும் பார்க்கலைனா, அது பாப்பா கையில ஏறி இருக்கும்.. என்று சொல்ல..

ஒரு நொடி பாரதியும், செல்லம்மாவும் கதிகலங்கி.

நன்றி அம்மா.. என்று சொல்லி விட்டு..

பாரதி, மெதுவாக பாக்கெட்டில் இருந்து மொபைல் எடுத்து,

செல்லம்மா கால் டாக்ஸி புக் பண்ணுடா வீட்டுக்கு, நீங்க முன்னாடி போங்க, நானே வரேன் மழை விட்டதும்.. இங்க நீயும், பாப்பாவும் இருக்க வேண்டாம், நிறையா பூச்சி இருக்கு என்று சொன்னதும்..

செல்லமாவோ,

நான் கண்ணம்மாவை வெச்சுகிட்டு பின்னாடி குடைய புடிச்சுகிறேன், நீங்க பொறுமையா போலாம் என்று சொல்ல சொல்ல,

மழை ஒரு புறம் அதிகமாக, அருகில் இருந்தர்வர்கள் மழை பற்றியும், அரசியல் பற்றியும் பேசி முடியவில்லை, இந்த பூச்சிகள் அவர்கள் பக்கம் போக வில்லை, காரணம் பாரதியும், செல்லம்மாவிற்கு அருகில் ஒரு பாதாள சாக்கடை, இருட்டில் தெரியவில்லை, உள்ளே இருப்பவர்களும் கொஞ்சம் இடம் தர மனமில்லை..

இறுதியில், சூழ்நிலை காரணமாக, செல்லம்மா டாக்ஸி புக் செய்ய தேடும் போது, இருவரும் அதிர்ந்தே போனார்கள், காரணம் இவர்கள் வீடு இருக்கும் இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர், டாக்ஸி கேட்பதோ அறுநூறு ரூபாய், காரணம் மழை, தண்ணீர் தேக்கம்.. ஆட்டோ ஒன்று கூட கிடைக்கவில்லை.. கிட்டத்தட்ட அரைமணி நேர போராட்டம்..

இந்த வலியில் தான், பாரதிக்கு தோன்றியது,

செல்லம்மாவையும், கண்ணம்மாவையும் இப்படி ரோட்ல நிக்கவெச்சுட்டோமே, கைல இருக்கறது நூறு ரூபாய், அது பெட்ரோல் போட வேணும், எங்க டாக்ஸில போறது..

பாரதி, கண்களில் நீர் ஒரு புறம், தோளில் கண்ணம்மா ஒரு புறம் நிம்மதியாக உறங்க , மறுகையில் செல்லம்மாவை பிடித்தபடி,

செல்லம்மா,

நம்மளும் கார் வாங்கணும் செல்லம்மா, சூழ்நிலை வரும்போதுதான் அது புரியது, இது அத்தியாசவமா, இல்ல ஆடம்பரம் தெரியாது..

ஆனா, நம்ம கார் வாங்கறோம்.. என்று சொல்ல,

அருகில் இருந்தர்வர்கள் ஒரு வினாடி பாரதியை பார்த்து விட்டு,

திரும்பி அவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்..

செல்லம்மா, மெதுவாக பாரதியிடம், கண்டிப்பா வாங்கறோம்..

ஆனா, ஒரு சின்ன பிரச்சனை பாரதி..

என்ன பிரச்சனை என்று பாரதி கேட்க ?

cheque book மறந்து வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன், எப்படி ஷோரூம் போய் வாங்கறது, மழை வேற வரது…

Representational Image

பாரதி, சற்று கோபத்துடன் செல்லம்மாவிடம்,

எப்படி இதெல்லாம் மறக்கற நீ ? கார்டு இருக்கா ? இல்ல… என்னோட proof எல்லாம் இருக்கா, அதுவும் இல்லை ? ஒரு சின்ன விஷயம், எப்படி மறக்கற..இப்போ, எங்க போய் வாங்கறது, கார் வாங்கிட்டு வீட்டுக்கு போகறது குள்ளே, மழையே விற்றும்..

அருகில் இருந்தவர்கள், சார் நீங்க என்ன பேசுறீங்க,

தெரிஞ்சுதா பேசுறீங்களா, எதுக்கு எவ்ளோ டென்ஷன் சண்டை போடறீங்க ?

அவங்க அதெல்லாம் கையில வெச்சுயிருந்தாலும், எப்படி கார் வாங்க முடியும் ?

அதற்க்கு பாரதி, சார் இவங்க இப்படிதான்,

போன மாசம், ஏர்போர்ட்ல, அதற்க்கு முன்னாடி ரயில்வே ஸ்டேஷன்..

எப்போதுமே மறக்கறா இந்த பண விஷயத்துல… பேசி கொண்டே

பாரதி, செல்லம்மாவிடம்,

சரி சரி எந்த bank cheque book செல்லம்மா மறந்துட்ட ?

அது அதுவந்து

என்று தழு தழுத்த குரலில்..தயங்கிக்கொண்டே

swiss bank என்று சொல்ல,

இருவரின் சிரிப்பு அடக்க முடியவில்லை, சிரிப்பில் கண்ணம்மாவும் எந்திரிச்சு விட, அப்பா, அம்மா சிரிப்பதை கண்டு அவளும் அறை தூக்கத்தில் சிரித்து விட்டு மறுபடியும் தூங்கினால்,

மழையும் நின்றது..

அங்கே இருந்தவர்கள், பாரதியையும், கண்ணம்மாவையும்,

மன நலம் பாதிக்க பட்டவர்கள் போல் பார்த்து கொண்டே இருக்க..

பாரதி, செல்லம்மாவிடம் ஏறுடா போலாம் என்று சொல்ல.

செல்லம்மா, கண்ணம்மாவை தன் தோளில் வைத்து கொண்டு மெதுவாக ஏறியதும்,

பாரதி போலாம்டா.., என்று இருவரும் சொல்ல.. வண்டி நகர்ந்தது..

செல்லம்மா, மனதிற்குள் கண்டிப்பா கார் வாங்கலாம் பாரதி, கவலைப்படாதீங்க,

என்று சொல்லிக்கொண்டே, சைடு கண்ணாடியில் பாரதியை பார்க்க..

பாரதியோ தன் மனதிற்குள்..

சாரி கண்ணம்மா, சாரி செல்லம்மா..

கண்டிப்பா கார் வாங்குவோம்..

இதே மழையில டிரைவ் போவோம்..உங்கள இப்போ கஷ்டப்படுத்துட்டேன், சீக்கிரமா வாங்குவேன் என்று நினைக்கும் போது..

கண்களில் நீரும், ரோட்டில் இருந்த மழை நீரும் ஒன்று சேர்ந்து அடிக்க, சைடு கண்ணாடியில் இதை பார்த்த செல்லம்மா, பாரதி கண்களை தொடைத்து,

கண்டிப்பா வங்கோவோம்..

கண்ணாடி வழியே சிரித்து கொண்டே போனார்கள்…

கண்டிப்பா வாங்குவோம் !!!

எழுத்தும், கற்பனையும்,

கல்யாணராமன் நாகராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.