LGBTQ+ தலைவர்களை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க்..!

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

தங்கம் விலை குறையலாம்.. 3 நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு.. ஏன்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு?

ஏற்கனவே எலான் மஸ்க் தான் அறிவித்த 10 சதவீத பணிநீக்கத்தைத் தாண்டி 14 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில் தற்போது இருக்கு முக்கிய உயர் அதிகாரிகளை மட்டும் அல்லாமல் LGBTQ+ சமுகத்தைச் சார்ந்த முக்கியமான தலைவர்களையும் பணிநீக்கம் செய்து பெரிய அளவிலான எதிர்ப்புகளைச் சம்பாதித்துள்ளார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா நிறுவனத்அதன் LGBTQ+ சமூகத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய திட்டங்களின் தலைவர் ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்துள்ளார்.

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லா நிறுவனத்தின் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் பணிநீக்கத்தின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்பட்டாலும், எலான் மஸ்க்-ன் டிவிட்டர் பதிவுகள் அவர் “woke mind virus” எதிரொலியாக இதைச் செய்கிறார் எனப் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

LGBTQ+ தலைவர்
 

LGBTQ+ தலைவர்

கடந்த ஐந்து வருடமாக டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாபி பெரெட்டா-பாரிஸ் கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பாபி பெரெட்டா-பாரிஸ் ரெக்யூட்டராகப் பணியமர்த்தப்பட்டார் மற்றும் அவரது பதவிக் காலத்தில் மூன்று முறை பதவி உயர்வு பெற்றார். டெஸ்லாவில் LGBTQ+ இன் தன்னார்வத் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் பணிநீக்கம்

ஊழியர்கள் பணிநீக்கம்

எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு வருவதைக் கட்டாயமாக்கினார்.இதைத் தொடர்ந்து பொருளாதார மந்த நிலையைக் கணக்குக் காட்டி 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார் ஆனால் தற்போது 14 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளார்.

புதிய பிரச்சனைகள்

புதிய பிரச்சனைகள்

ஒருபக்கம் டிவிட்டரை கைப்பற்றும் பணியில் பிசியாக இருந்தாலும் மறுபுறம் புதிய பிரச்சனைகளைத் தலையில் வாரிப்போட்டுக்கொள்வதில் உறுதியாகவும் தயாராகவும் உள்ளார் எலான் மஸ்க். இவரின் செயல் குறித்து உங்கள் கருத்து என்ன..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க…

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon musk owned Tesla layoff head of LGBTQ+, diversity lead

Elon musk owned Tesla layoff head of LGBTQ+, diversity lead LGBTQ+ தலைவர்களைப் பணிநீக்கம் செய்த எலான் மஸ்க்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.