விக்ரம் போல் மற்றோரு படத்துக்கும் பணம் வாங்காமல் நடித்த சூர்யா!


கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் மட்டுமின்றி, மாதவனின் புதிய திரைப்படத்திலும் ஒற்றை ரூபாய் கூட வாங்காமல் நடித்துள்ளார் சூர்யா.

நடிகர் ஆர்.மாதவன் இயக்குநராக அறிமுகமாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect) திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இருவரும் ஒற்றை ரூபாய் கூட பணம் எதுவும் வாங்கவில்லை என்று மாதவன் கூறியுள்ளார்.

இது குறித்து மாதவன் திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “சூர்யாவாகட்டும் அல்லது (ஷாருக்) கான் சாஹப்பாக இருக்கட்டும், அவர்களில் யாரும் படத்திற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. அவர்கள் கேரவன்கள், உடைகள் மற்றும் உதவியாளர்களுக்கு கூட எதுவும் வசூலிக்கவில்லை.

சூர்யா தனது படக்குழுவினருடன் சொந்தப் பணத்தில் மும்பையில் படப்பிடிப்புக்கு விமானத்தில் வந்தார். அவர் விமானங்களுக்குக் கூட கட்டணம் வசூலிக்கவில்லை, அவருடைய வசனங்களை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளருக்கும் கூட பணம் வசூலிக்கவில்லை” என்று கூறினார்.

விக்ரம் போல் மற்றோரு படத்துக்கும் பணம் வாங்காமல் நடித்த சூர்யா!

நடிகர் சூர்யா சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் நடிகையும் தயாரிப்பாளருமான பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோரும் சமூக ஊடகங்கள் வழியாக தனது படத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியதாக மாதவன் கூறினார்.

விக்ரம் போல் மற்றோரு படத்துக்கும் பணம் வாங்காமல் நடித்த சூர்யா!

திரையுலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று கூறிய மாதவன், “அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மாதவனின் ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜூலை 1-ஆம் திகதி வெளியாகிறது.

விக்ரம் போல் மற்றோரு படத்துக்கும் பணம் வாங்காமல் நடித்த சூர்யா!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.