5G Price: 5ஜி மொபைல் டேட்டா கட்டணம் இது தான்… அமைச்சர் வெளியிட்ட இனிப்பான செய்தி!

5G Price in India: 5ஜி சேவை விரைவில் இந்திய பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜூலை மாத இறுதியில் ஏலம் நடைபெறும் என ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஏலத்தில் பங்குபெறும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு 5ஜி அலைக்கற்றை பெறும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க முடியும். ஆகஸ்ட்-செப்டம்பரில் 5ஜி நெட்வொர்க் தொடங்கப்படும் என்ற தகவலை ஒன்றிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Vikram Movie: விக்ரம் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா; எந்த காட்சினு தெரியுமா?

2022 ஆம் ஆண்டின் இறுதியில், நாடு முழுவதும் 20 முதல் 25 நகரங்களில் 5G சேவைகள் கிடைக்கும். மேலும், பிற நாடுகளை விட இந்தியாவில் 5ஜி டேட்டாவின் விலை குறைவாக இருக்கும் என்று வைஷ்ணவ் தெரிவித்தார்.

இந்த நகரத்தில் 5ஜி சேவை முதலில் தொடங்கப்படும்

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 20 முதல் 25 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது.

Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை, மும்பை, புனே, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், காந்திநகர், ஜாம்நகர், அகமதாபாத், சண்டிகர் ஆகிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. எனவே, தமிழ்நாடு தலைநகர் சென்னை குடிமக்கள் முதல் முறையாக 5ஜி சேவையைப் பயன்படுத்த முடியும்.

5ஜி மொபைல் டேட்டா கட்டணம்

இந்தியாவில் இணையத்தின் சராசரி சுமார் ரூ.155 ஆக இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதுவே, உலக சராசரி கட்டணம் ரூ. 1,800 என்றளவில் இருக்கிறது.

எனவே, தற்போதுள்ள 4ஜி டேட்டா விலையிலேயே 5ஜி சேவையும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ரந்தீப் செளகோன் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

Yoga Day 2022: உங்களை மகிழ்வுடன் வைக்கும் யோகாசனம்… சிறந்த செயலிகளின் பட்டியலைக் காணுங்கள்

இந்தியாவில் 5ஜி சேவைக்கான விலை 4ஜியை விட அதிகமாக இருக்காது என்று தெரிவித்திருந்தார். 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்குப் பிறகுதான் அதன் சரியான விலை விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மேலும், உலகின் சராசரி டேட்டா பயன்பாடு 11ஜிபி ஆக இருக்கும் நிலையில், இந்தியாவில் இதன் நுகர்வு 18ஜிபி ஆக இருப்பதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.