நடிகர் விஜயகாந்த் காலில் விரல் அகற்றம்

தமிழ் சினிமாவில் 150 படங்களில் நடித்தவர் விஜயகாந்த். பெரும்பாலும் ஆக்சன் படங்களாக நடித்துள்ள இவர் அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். கருணாநிதி -ஜெயலலிதா காலத்தில் தேமுதிக என்னும் கட்சியை துவக்கி அதிரடி அரசியல் செய்து வந்த விஜயகாந்த், ஒரு கட்டத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அரசியலில் இருந்து விலகி இருந்து வருகிறார். அதோடு அவருக்கு அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் காலில் இருந்து மூன்று விரல்கள் எடுக்கப்பட்டது.

இது குறித்து தேமுதிக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.