10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 24ம் தேதி முதல் பெற்றுகொள்ளலாம்.. !

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிகல்விதுறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கானப் பொதுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவிகள் என 8 லட்சம் பேர் பொது தேர்வை எழுதினர். அதில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதே 10ம் வகுப்பு பொதுதேர்வை9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் எழுதினர். அவர்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் அல்லது http://dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம் என பள்ளிகல்வி துறை தெர்வித்துள்ளது.

இந்நிலையில், மறுக்கூட்டலுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் நாளை முதல் வருகின்ற 29ம் தேதி வரை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.