தங்கம் விலை குறையலாம்.. 3 நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு.. ஏன்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு?

தங்கம் விலையானது இன்றும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.

இது அமெரிக்காவின் பத்திர சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், வட்டியில்லா முதலீடானது பெரியளவில் மாற்றம் காணவில்லை.

பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், ரெசசன் குறித்தான அச்சம் தங்கம் விலையை குறைய விடாமல் தடுக்கிறது. இது இந்திய சந்தை, சர்வதேச சந்தையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தினை குறைத்துள்ளது.

தடுமாறும் தங்கம் விலை.. இன்று குறையுமா.. சென்னையில் என்ன நிலவரம்? #gold

பணவீக்கம்

பணவீக்கம்

தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்க விகிதமானது உயர்ந்து வருகின்றது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இது தொடர்ந்து மத்திய வங்கிகளை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு

இலக்கு

இதற்கிடையில் 3 நிபுணர்கள் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் தங்கம் விலையானது சரிவினைக் காணலாம். தற்போது ஏற்றத்தில் காணப்பட்டாலும் முடிவில் சரிவில் முடிவடையலாம் என கணித்துள்ளனர். அதில் ஒரு நிபுணர் தங்கம் விலையானது கடைசி காலாண்டில் அவுன்ஸூக்கு 1750 டாலர்களை எட்டலாம் என கணித்துள்ளனர்.

விலை அதிகரிக்கலாம்
 

விலை அதிகரிக்கலாம்

வட்டி விகிதம் என்பது அதிகரித்தாலும், மறுபுறம் தேவையும் அதிகரித்து வருகின்றது. இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் என நம்பப்படுகிறது. எனினும் நீண்டகாலத்திற்கு வட்டி விகிதம் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காராணமாக தங்கம் விலையானது சற்று அழுத்தம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையாகலாம்

கடுமையாகலாம்

பல நிபுணர்களும் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, வட்டி விகித நடவடிக்கைகளை கடுமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கிட்டதட்ட 3.5% வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச சந்தையில் நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து, 1842.35 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே போல வெள்ளி விலையும் சற்று அதிகரித்து, 21.672 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையிலும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக பெரியளவில் மாற்றமின்றி, தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை சரிவு

ஆபரண தங்கம் விலை சரிவு

சர்வதேச சந்தையில் விலை பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்பட்டாலும், இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4775 ரூபாயாகவும், 8 கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 38,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5209 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 41,672 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 52,090 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

ஆபரணத் தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளி விலையானது சமீபத்திய நாட்களாக பெரியளவில் மாற்றம் காணவிலை. இன்றும் கிராமுக்கு 66.30 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 663 ரூபாயாகவும், கிலோவுக்கு 66,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold prices on 21st june 2022: 3 analysts expects see lower gold prices by year end

The price of gold in the international market remains largely unchanged amid various factors. However, the price of jewelry gold is slightly lower today.

Story first published: Tuesday, June 21, 2022, 10:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.