அதிமுகவில் வருகின்ற 23-ஆம் தேதி (நாளை) பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இடையே உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனிடையே 8-வது நாளாக நேற்றும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த மாவட்ட செயலாளர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு தாமரை ராஜேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தாமரை ராஜேந்திரன், எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.