ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு அருகே, இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில், 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.