மாலையில் நாம் டீ குடிக்கும்போது , சூடாக மொறு மொறுனு வடை சாப்பிடலாம் என்று தோன்றும். ஆனால் வடை செய்வது அவ்வளவு எளிது அல்ல அதற்கே பல பக்குவம் பார்க்க வேண்டுமே என்ற சலிப்பு உங்களுக்கு ஏற்படும். ஆனால் எந்த மாவையும் அறைக்காமல் கிரிஸ்பியான அரிசி மாவு வடை எப்படி தயாரிக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்,
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
சீரகம் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் –சிறிதளவு
நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை – சிறிதளவு
பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை
பெரிய வெங்காயம் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நறுக்கிய மல்லித் தழை மற்றும் கறிவேப்பிலை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் இரண்டு பச்சை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பெருங்காயத் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். இதனுடன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களையும் நன்கு கைகளால் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் கலந்து விடும் பொழுது வெங்காயத்தையும் உதிர்த்து கொள்ளுங்கள்.
பின்னர் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அரிசி மாவு சேர்த்த பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்திற்கு இந்த கலவையை நாம் கொண்டு வர வேண்டும். எடுத்து தட்டினால் வடை போல் தட்ட முடிய வேண்டும். அந்த அளவிற்கு பிசைந்து கொள்ளுங்கள்.
பின் கைகளில் எண்ணெய் தடவி கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து வடை தட்டு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள். இந்த அரிசி மாவு வடை நல்ல சுவையாக இருக்கும்.