அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவரை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் மாறிமாறி சமரசத்தில் ஈடுபட்டனர் அதுவும் கைகொடுக்கவில்லை.
12 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக களம் இறங்கினர். ஆனால் தற்போது 7 மாவட்ட செயலாளர் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு ஒத்திவைக்க கடிதம் எழுதினார். எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டிய தேவையில்லை என்று பதில் கொடுத்துள்ளார்.
இதற்கு இடைப்பட்ட வேலையில் நீதிமன்ற வழக்கின்படி காவல்துறை பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்கு – அனுமதி கொடுப்பது தொடர்பாக காவல்துறையினர் முடிவெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஆவடி காவல் ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில் இரு தரப்பினரிடையே சுகமும் இல்லை என்பதால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனுமதி கொடுக்கக்கூடாது என்று மனு கொடுத்துள்ளார்.
எனவே அடுத்த கட்டமாக ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது? அவர் முன் இருக்கு வாய்ப்புகள்…
• ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெற்றால் அதை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது.
• இன்று நீதிமன்றத்தில் அதிமுக சட்ட விதிகள் திருத்தம் தொடர்பான வழக்கில் ஏதேனும் உத்தரவிட்டால் அதுக்கு தகுந்தது போல் ஓபிஎஸ் நிலைப்பாடு இருக்கும்.
• இந்திய தேர்தல் ஆணையத்திடம் பொதுக்குழு செயற்குழுவை எதிர்த்து முறையிட வாய்ப்புள்ளது.
• ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றால் அங்கே ஒற்றை தலைமை தீர்மானம் வரும் பட்சத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்யலாம்.
• ஜெயலலிதா நினைவிடம் செல்ல வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்படுகிறது இருந்தும் நிலைமை பொறுத்து மாறுபடும்.
• சசிகலவை ஓபிஎஸ் சந்திக்கக்கூடும் என்று சொல்லகிறார்கள். ஆனால் அது எப்போது ? எங்கே என்ற கேள்வியும் உள்ளது.
செய்தியாளர் – சுபாஷ்பிரபுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM