இன்று செய்திகளை பார்க்க ஆயிரக்கணக்கான இணையதளங்கள் வந்துவிட்டாலும் உலகின் பெரும்பாலான மக்கள் பொதுவாக செய்திகளைப் பார்க்கும் தளமாக கூகுள் நியூஸ் விளங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த கூகுள் நியூஸ் கடந்த எட்டு ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு கூகுள் நியூஸ் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆல்ஃபாபெட் நிறுவனம் மற்றும் பிற செய்தி சேகரிப்பாளர்கள் தங்கள் நாட்டு செய்தி நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்துவதற்காக, வெளியீட்டாளர்களுக்கு பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்திய ஸ்பெயின் நாட்டின் விதி காரணமாக கூகுள் செய்தி சேவை அந்நாட்டில் நிறுத்தப்பட்டது.
டாடாவால் முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது.. எமிரேட்ஸ் தலைவர் புகழாரம்!
ஸ்பெயினில் கூகுள் நியூஸ்
இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 22 ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் ஸ்பெயின் நாட்டில் கூகுள் நியூஸ் சேவை மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பதிப்புரிமை விதிகள்
ஸ்பெயின் நாட்டில் ஐரோப்பிய யூனியன் பதிப்புரிமை விதிகள் 2020ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. அது குறித்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதை அடுத்து தற்போது பல ஊடகங்கள் அந்நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 8 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டில் கூகுள் நியூஸ் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் அந்நாட்டில் சேவை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகள் சேவை
இதுகுறித்து ஐபீரியாவின் துணைத் தலைவர் ஃபுயென்சிஸ்லா கிளெமர்ஸ் அவர்கள் கூறியபோது, ’20 ஆண்டுகளாக இருக்கும் கூகுள் நியூஸ் சேவை, கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டிற்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி என்று கூறினார்.
மேலும் செய்தி வெளியீட்டாளர்கள் பணம் செலுத்துவதற்கான முறையை கூகுள் நியூஸ் விரைவில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகப்படுத்தும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு
உலகம் முழுவதிலும் இருந்து வெளியாகும் இணைய தளங்களின் செய்தி தொகுப்பாக கூகுள் நியூஸ் விளங்கி வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான வெளியீட்டாளர்கள் மற்றும் பத்திரிகைகளில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட செய்திகளின் இணைப்பாக கூகுள் நியூஸ் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு – ஐஓஎஸ்
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணைய தளத்தில் கூகுள் நியூஸ் செய்திகளை தினமும் மில்லியன் கணக்கானோர் பார்த்து வருகின்றனர். கடந்த 2002ஆம் ஆண்டு பீட்டா பதிப்பாக வெளிவந்த கூகுள் நியூஸ், கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிகாரபூர்வமாக பயன்பாட்டுக்கு வந்தது.
ஒரு பில்லியன் டாலர்
இந்த சேவையை தொடங்கியவுடன் உலகின் மிகப்பெரிய செய்தி தொகுப்பாக கூகுள் நியூஸ் இயங்கி வருவதாக அறிவிக்கப்பட்டது என்பதும் தற்போது கூகுள் நியூஸ் பதிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்ய திட்டமிட்டதாக அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Google News reopen in Spain after 8 years shutdown
Google News reopen in Spain after 8 years shutdown | 8 வருடங்களுக்கு பின் மீண்டும் கூகுள் நியூஸ்: எந்த நாட்டில் தெரியுமா?