பொறியியல் படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் 33% வரை குறையலாம்! கல்வி ஆலோசகர்கள் தகவல்…

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்பில் சேர கட் ஆப் மதிப்பெண் வரை குறையலாம் என பிரபல கல்வி ஆலோசகர்கள் ஜெயபிரகாஷ் காந்தி , அஸ்வின் போன்றோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அதன்படி,  பொறியியல் படிப்பிற்கான  கட்ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டை விட 1 முதல் 33 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பு இருப்தாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த தேர்வை 8,06,277 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில்,  93.76% பேர் தேர்ச்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவம், பொறியியல் உள்பட  உயர்கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர். நடப்பாண்டு, முக்கியமான கல்லூரிகளில் கணினி அறிவியல் படிப்புகளுக்கு போட்டி அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பலருக்கு பொறியியல் படிப்புக்கான கட்ஆப் எப்படி இருக்கும், இடம் கிடைக்குமா என்ற சந்தேகங்களும் இருந்து வருகின்றனர். அவர்களின் சந்தேகத்தை போக்கும் வகையில்,  கல்வியாளர்கள் ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர் அஸ்வின்  போன்றோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

கல்வி ஆலோசகர் அஸ்வின் வெளியிட்டுள்ள தகவலில், பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டை காட்டிலும் 1 முதல் 33 மதிப்பெண் வரை குறையும் என தெரிவித்துள்ளார்.  ‘கடந்த ஆண்டுகளின் தரவரிசைப் பட்டியலையும் ஒப்பிட்டு, நடப்பாண்டு மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடப்பட்டு பார்க்கும்போது, அறிவியல் பாடப்பிரிவில் மதிப்பெண் குறைவாகப் பெற்ற மாணவர்கள் அதிகமாக இருக்கின்றனர். கொஞ்சம் அதிகமாக மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் குறைவாகத்தான் இருக்கின்றனர். இதனால் கட் ஆப் மதிப்பெண் 33 மதிப்பெண் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

300 மதிப்பெண்ணிற்கும் குறைவாக பெற்ற மாணவர்கள் தான் அதிகளவில் இருக்கின்றனர். பொறியியல் படிப்பில் 60 % மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்றவர்கள் தயவு செய்து பொறியியல் படிப்பில் சேர்வது பற்றி யோசிக்காதீர்கள். எந்த தொழில் நிறுவனத்திற்கு சென்றாலும் 10, 12 ஆம் வகுப்பில் 60 % மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களா? என்பதை பார்ப்பார்கள். எனவே, 600 மதிப்பெண்களுக்கு 360 மதிப்பெண்களுக்கு கீழே இருந்தால் பொறியியல் படிப்பினை தேர்வு செய்யாதீர்கள்.கடந்தாண்டை விட இந்தாண்டில் கட் ஆப் மதிப்பெண் குறையத்தான் போகிறது. கட்ஆப் மதிப்பெண் 1 முதல் அதிகபட்சமாக 33 வரை குறைய வாய்ப்புள்ளது’ என்று கூறியுள்ளார்.

அதுபோல, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு போட்டி அதிகமாக இருக்கும். பொறியியலைப் பொறுத்தவரை மாணவர்களின் உச்சபட்ச விருப்பம் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) தான். அடுத்ததாக எம்.ஐ.டி கேம்பஸ் (மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி) உள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியும், மதுரை தியாகராஜா அரசு பொறியியல் கல்லூரியும் உள்ளன. அடுத்தப்படியாக கோயம்புத்தூர் சி.ஐ.டி (கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி) கல்லூரியும், ஜி.சி.டி (அரசு தொழில்நுட்ப கல்லூரி) கல்லூரியும் மாணவர்களின் டாப் விருப்ப தேர்வாக உள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக மாணவர்கள் தேர்ந்தெடுப்பது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் (அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, சென்னை) கல்லூரி உள்ளது. இங்கு மாணவர்கள் கெமிக்கல், லெதர், டெக்ஸ்டைல் உள்ளிட்ட படிப்புகளை ஆர்வமுடன் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் கெமிக்கல் படிப்புகளை எல்ட்ரோ-கெமிக்கல் படிப்புகளுக்கு போட்டி கடுமையானதாக இருக்கிறது. காரைக்குடி சிக்ரி (செண்ட்ரல் இன்ஸ்டியூட் ஆஃப் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச்) இந்த படிப்பில் முதன்மை கல்லூரியாக இருக்கிறது.

அரசுப் பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி ஆகியவை மாணவர்களின் விருப்பமான கல்லூரிகளாக இருக்கிறது.

 அதைத்தொடர்ந்து,  காரைக்குடி அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. மேலும், தந்தை பெரியார் கல்லூரி வேலூர், திருச்சி அரசு பொறியியல் கல்லூரி ஆகியவையும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இதேபோல் திருநெல்வேலி மற்றும் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரிகளும் முன்னிலையில் உள்ளன.

அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்களைப் பொறுத்தவரை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி ஆகிய வளாகங்கள் முன்னனி விருப்பங்களாக உள்ளன. அடுத்து தேனி மற்றும் தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரிகள் மாணவர்களின் விருப்ப பட்டியலில் உள்ளன என தெரிவித்த உள்ளார்.

மேலும், இந்தக் கல்லூரிகளை எல்லாம் மாணவர்கள் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். இது தவிர உள்ள பிற பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தற்போது அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், அந்த கல்லூரிகளை நேரில் சென்று பார்வையிட்டு, அந்த கல்லூரிகள் பற்றிய முழு விவரங்களை தெரிந்துக் கொண்டு, நீங்கள் திருப்தி அடைந்தால் சேர்க்கை பெறலாம், என்றும் அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் காஞ்சிபுரம் கல்லூரி முன்னிலையில் உள்ளது. அடுத்தப்படியாக, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஆரணி, திண்டிவனம், அரியலூர், தஞ்சாவூர், கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், இராமநாதபுரம், பட்டுக்கோட்டை போன்றவை மாணவர்களின் இரண்டாம் கட்ட விருப்ப தேர்வுகளாகவே உள்ளன, எனவே அவற்றை பற்றி நன்றாக அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், என்றும் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.

அடுத்தப்படியாக, அரசு அல்லது தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த கல்லூரிகளின் வேலைவாய்ப்பு திறன், அதாவது கேம்பஸ் இண்டர்வியூவில் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் அதிகப்பட்ச சம்பள அளவைப் பொறுத்து, அந்தக் கல்லூரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், இ

வ்வாறு கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.