அதிமுக பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நாளை பங்கேற்க வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுக்குழுவில் பங்கேற்க வரவேண்டுமென்று ஓ பன்னீர்செல்வத்திற்கு, எடப்பாடி கே பழனிசாமி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
மேலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திட்டமிட்டபடி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி கே பழனிசாமி உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் என்றும் எடப்பாடி கே பழனிசாமி உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அதிமுகவில் சுமார் 2600 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி கே பழனிசாமி க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் யாரும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#BigBreaking || திடீர்திருப்பம்… பொதுக்குழு கூட்டத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் – சற்றுமுன் பறந்த பரபரப்பு கடிதம்.!#ADMK #EPS #EdappadiPalaniswami #OPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/yOTJS1x3Id
— Seithi Punal (@seithipunal) June 22, 2022
#BigBreaking || தர்மயுத்தம் 2.O…. வேறு வழியே இல்லை.. இன்னும் சற்று நேரத்தில் மெரினா புறப்படும் ஓபிஎஸ்?! #ADMK #EPS #EdappadiPalaniswami #OPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/pMjDJfXNVE
— Seithi Punal (@seithipunal) June 22, 2022