இந்தியாவில் EV கார் தயாரிக்கும் பாக்ஸ்கான்.. தமிழ்நாட்டுக்கு வருமா..?!!

உலகம் முழுவதிலும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் இதேவேளையில் அதிகளவில் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளது. இதனால் இத்துறை வர்த்தகத்தின் வளர்ச்சியின் வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில் தான் ஆட்டோமொபைல் அல்லாத ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு ஒப்பந்தத்தின் கிழ் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குக் கார்களை உற்பத்தி செய்யும் கொடுக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிக்கப் பல தொழிற்சாலைகளை வைத்துள்ள நிலையில் தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் தொழிற்சாலையும் தமிழ்நாட்டில் அமைக்கத் திட்டமிட்டு உள்ளது.

8 வருடங்களுக்கு பின் மீண்டும் கூகுள் நியூஸ்: எந்த நாட்டில் தெரியுமா?

பாக்ஸ்கான்

பாக்ஸ்கான்

தைவான் நாட்டைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், சீனாவிற்குப் பின்பு ஆசிய உற்பத்தி விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்தும் முக்கியமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது.

பாக்ஸ்ட்ரான் (Foxtron)

பாக்ஸ்ட்ரான் (Foxtron)

பாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற மாபெரும் இலக்குடன், இப்பிரிவுக்காகவே பாக்ஸ்ட்ரான் (Foxtron) நிறுவனத்தைத் துவங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா தொடர்ந்து Foxtron வாயிலாக இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திட்டத்தைக் கட்டமைத்து வருகிறது.

சென்னை
 

சென்னை

தற்போது பாக்ஸ்கான் சென்னைக்கு அருகில் ஒரு தொழிற்சாலையும், பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய கிளையான பார்த் FIH நிறுவனத்தின் கீழ் ஒரு நிறுவனம் என இரு தொழிற்சாலைகளில் ஆப்பில், சியோமி உட்படப் பல பிராண்டுகளுக்கான ஸ்மார்ட்போன்-ஐ தயாரித்து வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

மேலும் பாக்ஸ்கான் தற்போது ஸ்மார்ட்போன் தாண்டி எலக்ட்ரிக் வாகனங்கள் உட்படப் பல பொருட்களைத் தயாரிக்கப் புதிய வாடிக்கையாளர்களைத் தேடி வருகிறது. இதேவேளையில் பாக்ஸ்கான் குரூப்-ன் முதலீட்டுக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.

Fisker-க்கு ஹைப்ரிட் EV கார்

Fisker-க்கு ஹைப்ரிட் EV கார்

கடந்த வருடம் பாக்ஸ்கான் அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்களை ஒப்பந்த முறையில் தயாரித்துக்கொடுக்க ஒரு கார் தயாரிப்பு தொழிற்சாலையைக் கைப்பற்றியது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து தற்போது பாக்ஸ்கான் Fisker என்னும் பிராண்டுக்கு ஹைப்ரிட் எலக்ட்ரிக் கார் தயாரித்துக் கொடுக்கிறது.

3ஆம் தரப்பு ஒப்பந்தம்

3ஆம் தரப்பு ஒப்பந்தம்

இந்த மாடலை தான் தற்போது பாக்ஸ்கான் இந்தியாவிலும் செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. 3ஆம் தரப்பு ஒப்பந்தம் அடிப்படையில் எப்படி ஆப்பிள் நிறுவனத்திற்குப் பாக்ஸ்கான் ஸ்மார்ட்ரபோன் தயாரித்துக் கொடுக்கிறதோ, அதேபோல் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது பாக்ஸ்கான். சமீபத்தில் ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி தயாரிப்பு

பேட்டரி தயாரிப்பு

பாக்ஸ்கான் ஜூன் 15ஆம் தேதி தனது முதல் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையைத் தென் தைவான் பகுதியில் இருக்கும் Kaohsiung-ல் துவங்கியது. எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் சொந்தமாகப் பேட்டரி தொழிற்சாலையைத் துவங்கியது மூலம் அதன் நீண்ட காலத் திட்டத்தைப் பார்க்க முடிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Foxconn expanding manufacturing EVs in India; Chennai may get jackpot

Foxconn expanding manufacturing EVs in India; Chennai may get jackpot இந்தியாவில் EV கார் தயாரிக்கும் பாக்ஸ்கான்.. தமிழ்நாட்டுக்கு வருமா..?!!

Story first published: Wednesday, June 22, 2022, 13:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.