பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் காரசாரமான வார்த்தை மோதல் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமளிதுமளி
95 அமெரிக்க டொலர்களுக்கு எரிவாயுவை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் 129 அமெரிக்க டொலர்களுக்கு எரிவாயுவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த நாட்களாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பில் ஆராயுமாறு, நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கோரிக்கை விடுத்தார்.
ரணிலின் நக்கலால் வந்த வினை
இந்த விடயம் தொடர்பில் பிரதமருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 222 பேரும் எரிவாயு கொள்ளையடிப்பதாக மக்கள் கூறுகின்றார்கள் என தயாசிறி ஜயசேகர கூறியதற்கு அதற்கு பிரதமர் கிண்டலடிக்கும் வகையில் பதிலளித்தமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.