அதிமுகவில் சுமார் 2600 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி கே பழனிசாமி க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் யாரும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயத்தில், நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நாளை பங்கேற்க வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திட்டமிட்டபடி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி கே பழனிசாமி உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு – மற்றும் ஒயரை தலைமை குடித்து இன்று மாலைக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதாக ஓபிஎஸ் தெரிவிக்க உள்ளதாக, அவரின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
#BigBreaking || கடைசி நேரத்தில் அதிகாரத்தை பயன்படுத்திய ஓபிஎஸ்…. சற்றுமுன் வெளியான தகவலால் பெரும் அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு.!#AIADMK #EdappadiPalanisamy #OPanneerselvam #ADMK #EPS #OPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/JHzp66CWi2
— Seithi Punal (@seithipunal) June 22, 2022