விஜய் படங்களின் பர்ஸ்ட் லுக்குக்கே எப்போதும் ரசிகர்களிடையே ஒரு கிரேஸ் இருக்கும். அப்படி வெளியான அவரது படங்களின் First Looks ஒரு பார்வை.
2023 பொங்கல் விஜய்யின் ‘வாரிசு’ படத்தோடுதான் தொடங்கவிருக்கிறது. டோலிவுட் இயக்குநர், களமிறங்கும் பல நட்சத்திரங்கள் எனப் பொங்கல் களை கட்டப் போகிறது.
2022 `பீஸ்ட்’ மோடில் தளபதி களமிறங்கிய படம். இதன் பர்ஸ்ட் லுக் பெரிதும் கொண்டாடப்பட்ட ஒன்று.
`மாஸ்டர்’ 2021-ல் வெளியானது. கொரோனா, ஊரடங்கு எல்லாவற்றையும் கடந்து திரைக்குப் பெரிய எதிர்பார்ப்போடு வந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இது.
விஜய் இரண்டு கேரக்டரில் நடித்திருந்த படம் ‘பிகில்’. அட்லி உடன் மூன்றாவது முறை கைக்கோர்த்திருந்தார் விஜய்.
CEO in the house என கிளாஸாகவும் அரசியல் மாஸாகவும் மிரட்டிய ‘சர்கார்’ படத்தை இயக்கியது ஏ.ஆர்.முருகதாஸ். `
`ஒன்று இல்ல இரண்டு இல்ல மூன்று விஜய்யைத் திரையில் பாருங்க’ என விளம்பரம் செய்யாத குறைதான். `மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு, தமிழன் உள்ளிட்ட குறியீடுகள் மண்ணைப் பற்றி பேசியதும் இதன் ஹிட்டுக்கு காரணம்.
`பைரவா’ பர்ஸ்ட் லுக் இது. 2017-ல் வெளிவந்த இந்தப் படத்தை பரதன் இயக்கியிருந்தார்.
`தெறி’ படம் 2016-ல் வெளியானது. குழந்தையின் அப்பாவாக சாஃப்டான கேரக்டரிலும் அநீதிக்கு எதிரான போலீஸாக ரஃப் அன்ட் டஃபாகவும் இரண்டு துருவங்களில் விஜய் நடித்த படம்.
கார்ப்பரேட்டை எதிர்த்து விவசாயத்துக்கு குரல் கொடுக்கும் ஹீரோவாக ( இரட்டை வேடங்களில்) விஜய் நடித்த படம் `கத்தி’. 2014-ல் இந்தப் படம் வெளியானது.
உங்களுக்கு மிகவும் பிடித்த விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் எது என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்க.