Telegram Premium: கூடுதல் அம்சங்கள் வேண்டுமா; பணத்த கட்டு – ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட டெலிகிராம்!

Telegram Premium Features: செய்தி மற்றும் கோப்புகளைப் பகிரும் தளமாக வலம்வரும் டெலிகிராம், புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதில் பயனர்களுக்கு கூடுதல் அணுகல்கள் வழங்கப்படுகிறது. மேலும், இந்த சேவை பயன்படுத்த, பயனர்கள் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இது குறித்து முன்னதாகவே நிறுவனம் அறிவித்திருந்தது. பெரிய கோப்புகள், சேனல்கள், படங்களை பதிவிறக்கம் செய்ய என பல விதமாக பயனர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது டெலிகிராம்.

இந்த நேரத்தில் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் பிரீமியம் சேவையில் என்னென்ன அம்சங்கள் நிறைந்துள்ளது, சேவைக்கான கட்டணம் என்ன என்பதை விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

5G Price: 5ஜி மொபைல் டேட்டா கட்டணம் இது தான்… அமைச்சர் வெளியிட்ட இனிப்பான செய்தி!

டெலிகிராம் பிரீமியம் அம்சங்கள் (Telegram Premium Features)

டெலிகிராம் பிரீமியம் சேவையில் பயனர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து அம்சங்களும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன். 1000 சேனல்கள் வரை பிரீமியம் சேவையில் அணுகல் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல், நான்கு கணக்குகளை பயனர்கள் வைத்திருக்க முடியும்.

பெரிய ஃபைல்களை அனுப்பலாம்
இதுவரை 2ஜிபி அளவிலான ஃபைல்களை மட்டும் தான் நாம் பகிர முடியும். பிரீமியம் சேவை மூலம் 4ஜிபி வரையிலான கோப்புகளை ஒரே நேரத்தில் பகிரலாம். மேலும், வரம்பற்ற சேமிப்பும் கிடைக்கும்.

அதிவேகமாக பதிவிறக்கம் செய்யலாம்
எந்த ஃபைல்களை டவுன்லோடு செய்தாலும் பரவாயில்லை. வேகமான வரம்பற்ற பதிவிறக்கங்களை மேற்கொள்ள டெலிகிராம் பிரீமியம் சேவை அனுமதிக்கிறது.

வாய்ஸ் டூ டெக்ஸ்ட்
உள்வரும் எந்த ஒரு ஒலி வடிவிலான மெசேஜ்களும், டெக்ஸ்ட் ஆக மாற்றம் செய்து வழங்கப்படும்.

விளம்பரங்கள் இருக்குமா
டெலிகிராம் பிரீமியம் சேவையில் விளம்பரங்கள் அற்ற அனுபவத்தைப் பெறலாம். எந்த சேனல்களிலும் விளம்பரங்கள் காட்டப்படாது.

தனித்துவமான எமோஜிகள்
தனிபயனாக்கப்பட்ட எமோஜிகள் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த ஸ்டிக்கர்களை சாதாரண பயனர்கள் பயன்படுத்த முடியாது.

Vikram Movie: விக்ரம் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா; எந்த காட்சினு தெரியுமா?

அரட்டைகளுக்கு புதிய அம்சங்கள்
அரட்டைகள் மேற்கொள்ள பிரத்யேக செட்டிங்ஸ் வழங்கப்படும். இதன் வாயிலாக நமக்கு தேவையான முறையில் சாட் பாக்ஸுகளை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

பேட்ஜ் கிடைக்குமா
பிரீமியம் சேவையில் இணையும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் புரொஃபைல் பேட்ஜ் வழங்கப்படும். இது அவர்களின் பெயர்களுக்கு அருகில் காட்டப்படும்.

Nothing Phone (1): ஏலத்தில் விற்றுதீர்ந்த நத்திங் போன் 1 – அதிகபட்ச ஏலத்தொகை எவ்வளவு தெரியுமா?

அனிமேஷன்ஸ்
புரொஃபைல் படங்களில் அனிமேஷன்களைப் புகுத்த முடியும். சாதாரண சேவையில் இருக்கும் பயனர்களுக்கு இது சாத்தியப்படாது.

பிரீமியம் ஐகான்
சந்தா செலுத்திய பயனர்கள் அனைவருக்கும் புதிய டெலிகிராம் ஆப் ஐகான்கள் வழங்கப்படும். இதனை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

டெலிகிராம் பிரீமியம் விலை

இதில் தான் நிறுவனம் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொண்டதாக தெரியவில்லை. ஆம், மாதம் ரூ.460 செலுத்தினால் மட்டுமே இந்த பிரீமியம் சேவைகளை அனுபவிக்க முடியுமாம்.

இந்தியா போன்ற நாடுகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளமே, விலைகளை குறைத்து பயனர்களை கவர்த்து வரும் வேளையில், டெலிகிராமின் இந்த அதீத கட்டணம் சேவை எந்த அளவிற்கு ஜொலிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.