கோவையில், சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த டெலிவரி ஊழியர் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
ஆலந்துறையைச் சேர்ந்த சபரிநாதன் என்ற 21 வயதான இளைஞர், தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்ற சபரிநாதன், சிறுவாணி சாலையில் சாலையோரம் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் சபரிநாதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சபரிநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற நபர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.