உக்ரைன் – ரஷ்யா பிரச்சனைக்களுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும், பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யா மீது தடையை விதித்து வருகின்றன.
குறிப்பாக இந்தியாவினை சேர்ந்த டாடா ஸ்டீல் நிறுவனம், ரஷ்யாவுடனான வணிக உறவினை துண்டிக்கும் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பிறகு டாடா ஸ்டீல் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரியை வாங்கவில்லை என அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் வணிகம் வேண்டாம்
ஏப்ரல் 20 அன்று டாடா ஸ்டீல் நிறுவனம் ரஷ்யாவுடனான வணிகத்தினை நிறுத்துவதாக அறிவித்தது. இந்தியாவில் மட்டும் அல்ல, இங்கிலாந்து, நெதர்லாந்தில் உள்ள டாடா ஸ்டீலொன் அனைத்து உற்பத்தி தளங்களும் ரஷ்யாவினை நம்பியிருப்பதை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக கூறியது.
பாதிப்பிருக்காது?
இதற்கு ரஷ்யாவுடன் வணிகத் தொடர்பில் இருப்பதால், அண்டை நாடுகள் டாடாவுடனான வணிகத் தொடர்பினை முறித்துக் கொள்ளலாம் என்பதால் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. டாடா ஸ்டீல் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்து வருவது மிக குறைவு தான். ஆக ரஷ்யாவுடனான தடையானது, டாடாவின் வணிகத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தாது எனவும் கூறப்பட்டது.
ஒப்பந்தம் எப்போது?
சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவில் இருந்து நிலக்கரி வாங்குவது, இறக்குமதி செய்வது தொடர்பாக சில தகவல்கள் தவறாக வெளியாகியுள்ளன. இது குறித்து நிறுவனம் விளக்கம் அளிக்க விரும்புகிறது. 75,000 டன் நிலக்கரி வழங்குவதற்கான ஒப்பந்தம் மார்ச் 2022ல் இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் சில வாரங்களுக்கு முன்பு தான் நடைமுறைக்கு வந்தது.
உறுதியாக உள்ளோம்
இது டாடாவின் தடை அறிவிப்புக்கு முன்னதாக போடப்பட்ட ஒப்பந்தம். ஆக எங்கள் உறுதிபாட்டை மதிக்கும் வகையில் மே 2022ல் ஏற்றுமதி பெறப்பட்டது. அறிவிப்புக்கு பிறகு டாடா ஸ்டீல் ரஷ்யாவிடம் இருந்து புதிதாக நிலக்கரியை வாங்கவில்லை. ஒரு பொறுப்பான கார்ப்பரேட் என்ற முறையில் உறுதியாக இருப்போம். தொடர்ந்து இருப்போம் என செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இன்று என்ன நிலவரம்?
டாடா ஸ்டீல் பங்கு விலையானது என் எஸ் இ-யில் 5.28% சரிவினைக் கண்டு, 838.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பிஎஸ்இயில் 5.24% சரிவினைக் கண்டு, 837.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 835.60 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1534.6 ரூபாயாகும்.
No purchase of coal from russia after April 20: Tata steel
Tata Steel announced last April that it would never trade ties with Russia. Tata Steel did not buy coal from Russia after the announcement, a company spokesman said.